SPRM தலைவர் அசாம் பாக்கி: ஒப்பந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப். 2-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தலைவர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, தனது சேவை ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

இன்று இங்கு SPRM தலைமையகத்தில் நடைபெற்ற மலேசிய அமலாக்க அமைப்புகளின் சிறப்பு பணிக்குழு (MATF) தொடர்பான ‘Way Forward’ கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் எந்தவித பதிலும் வழங்கப் போவதில்லை என்று தெளிவாகக் கூறினார்.

“கருத்து இல்லை. இந்த விஷயத்தைப் பற்றி நான் பதில் அளிக்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன்,” என அவர் சுருக்கமாக தெரிவித்தார்.

அவரது ஒப்பந்தம் தொடர்பாக சமீபத்தில் பல்வேறு ஊகங்கள் மற்றும் கருத்துக்கள் பரவி வரும் நிலையில், அதுகுறித்து நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டபோதும், அசாம் பாக்கி தொடர்ந்து மௌனமே காத்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *