தந்தை மறைந்த சில மணி நேரத்தில் லா லிகா வெற்றி: உணர்ச்சிவசப்பட்ட ஹான்சி ப்ளிக்
- Surendran Sumdraraj
- 11 May, 2026
ஸ்பெயின் லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவைச் சாம்பியனாக்கிய பின்னர், தனது வாழ்க்கையின் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான நாளை ஒருபோதும் மறக்க முடியாது என்று அணியின் பயிற்சியாளர் Hansi Flick தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த ஹான்சி ப்ளிக்கின் தந்தை உயிரிழந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நடைபெற்ற முக்கியமான “எல் கிளாசிகோ” ஆட்டத்தில், பார்சிலோனா தனது கடும் போட்டியாளரான Real Madrid அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் பார்சிலோனா தனது 29ஆவது லா லிகா பட்டத்தை உறுதி செய்தது.
கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்ற இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப்ளிக், “இன்றைய நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணம். இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன். மைதானத்தின் சூழல் அற்புதமாக இருந்தது,” என்றார்.
மேலும், கடினமான தனிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னுடன் நின்ற வீரர்கள் மற்றும் பயிற்சி குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். “இந்த தருணத்தில் அனைவரும் எனக்கு அளித்த ஆதரவு மிகப்பெரியது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன்,” என்றும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



