இணைய மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!
- THINAGAREN SANGGAREN
- 25 Oct, 2026
அக்தோபர் 25,
இணைய மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு கும்பலைச் சேர்ந்த 34 பேர் நேற்று காலை மலாக்கா மாநிலக் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 10.35 மணிக்கு மலாக்காவில் உள்ள KLEBANG KECHIL பகுதியில் உள்ள் ஒரு தனியார் தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 32 வெளிநாட்டினர்களும் 2 உள்ளூர்வாசிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 22 முதல் 51 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் 32 ஆண்கள் 2 பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
அவர்களிடமிருந்து 45 உயர்தர கணினிகளும் பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 3 மாதங்களாக இந்த தங்கும் விடுதியை வாடகைக்கு எடுத்து இணைய மோசடியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சோதனையின் மூலமாக RM318,600.00.மதிப்பிலானப் பொருள்கள் ரொக்கப்பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மலாக்கா மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

