ஆஸ்கர் 2026 - விருதுகளை போட்டி போட்டு அள்ளிய படங்கள்!
- Muthu Kumar
- 16 Mar, 2026
98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவதார்: ஃபயர் & ஆஷ், சின்னர்ஸ்,தி சீக்ரெட் ஏஜென்ட்,F1 உள்ளிட்ட படங்கள் விருதுகளை வென்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலக சினிமாவில் மிகவும் உயரிய விருதாக அகாடமிக் விருதுகள் பார்க்கப்படுகிறது. இது ஆஸ்கர் விருதுகள் எனவும் அழைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து திரைத்துறையை சார்ந்த நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 24 பிரிவுகளில் திரைப்பட விருதுகளானது வழங்கப்படுகிறது.
• ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணப்படத் திரைப்படத்திற்கான விருதை மிஸ்டர் நோபடி அகெய்ன்ஸ்ட் புடினும், சிறந்த ஆவணப்படக் குறும்படத்திற்கான விருதை ஆல் தி எம்ப்டி ரூம்ஸ் திரைப்படமும் வென்றன
• Two People Exchanging Saliva and The Singers ஆகிய இரு படங்களும் சிறந்த குறும்படத்திற்கான விருதுகளை வென்று அசத்தியுள்ளது. ஆஸ்கர் வரலாற்றில் 7வது முறையாக ஒரு விருதை இரு படங்கள் பகிர்ந்துள்ளது.
• சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதானது Sinners படத்துக்காக ரியான் கூக்லர் பெற்றுள்ளார். இந்த விருதைப் பெறும் இரண்டாவது கருப்பின திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
• சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை One Battle After Another படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன் வென்றுள்ளார்.
• சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கார் விருது அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்திற்கு கிடைத்துள்ளது.
• சிறந்த துணை நடிகருக்கான விருதை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படத்திற்காக சீன் பென் வென்றிருக்கிறார்
• சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கார் விருதை 'சின்னர்ஸ்' படத்திற்காக ஆடம் டுரால்ட் அர்காபாவ் வென்றார். இந்தப் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
• சிறந்த அசல் இசைக்கான ஆஸ்கார் விருதை சின்னர்ஸ் படத்துக்காக லுட்விக் கோரன்சன் பெற்றார். இவர் இதற்கு முன்பாக பிளாக் பாந்தர், ஓப்பன்ஹைமர் படங்களுக்கும் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.
• சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான (Production design) ஆஸ்கார் விருதானது ஃபிராங்கண்ஸ்டைன் படத்திற்காக தமரா டெவெரல் மற்றும் ஷேன் வியூ ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
• சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருதை 'ஒன் பேட்டில் ஆஃப் அனதர்' வென்றது. இதற்காக ஆன்டி ஜூர்கென்சன் விருதைப் பெற்றார்.
• சிறந்த ஒலிப்பதிவிற்கான ஆஸ்கார் விருதை 'F1' படம் வென்று அசத்தியுள்ளது. விருதுகளை கேரத் ஜான், அல் நெல்சன், க்வென்டோலின் யேட்ஸ் விட்டில், கேரி ஏ. ரிஸோ மற்றும் ஜுவான் பெரால்டா ஆகியோர் இணைந்து பெற்றனர்.
• 2026ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் சேர்க்கப்பட்ட சிறந்த நடிப்புக்கான விருதை One Battle After Another படத்திற்காக கசாண்ட்ரா குலுகுண்டிஸ் (Cassandra Kulukundis) வென்றுள்ளார்.
• சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கார் விருதை ஃபிராங்கண்ஸ்டைன் படத்திற்காக மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் கிளியோனா ஃபியூரி ஆகியோர் வென்றனர்.
• சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'தி கேர்ள் ஹூ க்ரைட் பேர்ல்ஸ்' ( The Girl Who Cried Pearls) வென்றது.
• Kpop Demon Hunters படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
• சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை எமி மடிகன் வெப்பன்ஸ் படத்துக்காக வென்றுள்ளார்.
• சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை One Battle After Another படம் வென்றது.
• சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை மைக்கேல் பி. ஜோர்டான் சின்னர்ஸ் படத்துக்காக வென்றார்.
• சிறந்த நடிகைக்கான விருதை Hamnet படத்திற்காக ஜெஸ்ஸி பக்லி கைப்பற்றியுள்ளார்.
• பால் தாமஸ் ஆண்டர்சனுக்கு One Battle After Another படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
• சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் Kpop Demon Hunters படத்தில் இடம்பெற்ற கோல்டன் பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.
• Sentimental Value படமானது சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை கைப்பற்றியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



