SARA உதவித்தொகை அதிகரிக்கப்படும்! - பிரதமர்
- Shan Siva
- 23 Jul, 2026
சிரம்பான், ஜூலை 23: அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் வகையில், அரசு வழங்கும் SARA உதவித்தொகை வரும் காலத்தில் அதிகரிக்கப்படும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வந்தபோதிலும், பொதுமக்களின் கருத்துக்களையும் கவலைகளையும் கருத்தில் கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மக்களின் கவலைகளுக்குச் செவிசாய்த்துள்ளோம். வரும் காலத்தில் அனைவருக்கும் SARA-வை மேலும் அதிகரிப்போம் என்று நெகிரி செம்பிலான் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் அனுமதித்தால், STR மற்றும் SARA உள்ளிட்ட மக்களுக்கான உதவிகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மடானி அரசாங்கம் தொடர்ந்து மதிப்பீடு செய்யும் என்று அன்வர் அண்மையில் கூறினார்.
இந்த விவகாரம் கருவூலப் பொதுச்செயலாளர் யோஹான் மஹ்மூத் மெரிக்கானுடன் விவாதிக்கப்பட்டதாகவும், வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் இது பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



