ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள்? பதற்றம் அதிகரிப்பு
- Surendran Sumdraraj
- 10 Apr, 2026
மத்திய கிழக்கு மோதல் சூழ்நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் (sea mines) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் சர்வதேச அளவில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில், ஈரான் இந்த முக்கிய கடல் வழித்தடத்தில் கண்ணிவெடிகள் பதிக்க முயற்சித்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, கண்ணிவெடிகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல ஈரான் கடற்படை கப்பல்களை அமெரிக்க படைகள் தாக்கி அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சில தகவல்களின் படி, ஹார்முஸ் நீரிணையில் குறைந்த அளவில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், தற்போது வணிக கப்பல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏவுகணை தாக்குதல்களே எனவும், கண்ணிவெடிகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் இன்னும் தெளிவாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



