டிஜிட்டல் அரசியல் அத்தியாவசியம் - டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான்

top-news

கோலாலம்பூர், ஜன. 16-

 அரசியல் வெளி வேகமாக டிஜிட்டல் தளங்களுக்கு நகர்ந்து வரும் நிலையில், அம்னோ கட்சியின் தொடர்பு அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் ‘அம்னோ டிஜிட்டல் செயலகம்’ (Sekretariat Digital UMNO) அமைக்கப்படுவது காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அம்னோ தகவல் தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் முன்வைத்த இந்த முன்மொழிவு, கட்சியின் தகவல் பரப்பல், தொடர்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த, தொடர்ச்சியான முறையில் முன்னெடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்னோ தகவல் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘டிஜிட்டல் யுக அரசியல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அம்னோ பேராளர் மாநாட்டில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், இது தற்காலிகமாக அல்லது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் விளக்கப்பட்டுள்ளது. மாறாக, தற்போதைய அரசியல் சூழல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான கலந்துரையாடல்களின் பயனாக இந்த முயற்சி உருவானதாக கூறப்பட்டுள்ளது.

இன்றைய அரசியல், பொதுக்கூட்டங்கள் அல்லது செய்தியாளர் சந்திப்புகளுக்கு மட்டும் கட்டுப்பட்டதாக இல்லாமல், சமூக ஊடகங்கள், செய்தி செயலிகள், வீடியோ தளங்கள்,  இணைய தகவல் வலையமைப்புகளில் 24 மணி நேரமும் நடைபெறுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *