சிலாங்கூர் உள்ளாட்சி சேவைகளுக்கு ஒருங்கிணைந்த ‘சூப்பர் செயலி’ அறிமுகம்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலாம், ஆக. 10-

 சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 12 உள்ளாட்சி அதிகாரிகளின் (பிபிடி) சேவைகள் மற்றும் புகார்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய ‘சூப்பர் செயலி’ ஒன்றை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில உள்ளாட்சி மற்றும் சுற்றுலாக் குழுத் தலைவர் டத்தோ என்ங் சூ லிம் தெரிவித்தார்.

ஒரே செயலி மூலம் பல்வேறு உள்ளாட்சி அதிகாரிகளின் சேவைகளை பொதுமக்கள் அணுகும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்படும் என அவர் கூறினார்.

உள்ளாட்சி அதிகாரிகளின் எல்லைப் பகுதிகள் குறித்து பொதுமக்களிடையே சில நேரங்களில் குழப்பம் ஏற்படுவதாகவும், இதுவே ஒருங்கிணைந்த செயலியை உருவாக்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு செயலி, இரண்டு செயலிகள், மூன்று செயலிகள் என உள்ளன. அதிகமான செயலிகள் இருப்பதால் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். இதுவும் எங்களின் பிரச்சினைகளில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

புதிய செயலி நடைமுறைக்கு வந்தால், பொதுமக்கள் தங்கள் பகுதியில் எந்த உள்ளாட்சி அதிகாரி பொறுப்பு வகிக்கிறார் என்பதை தனியாகத் தேட வேண்டிய அவசியம் குறையும்.

மேலும், பல்வேறு உள்ளாட்சி சேவைகள் மற்றும் புகார்களை ஒரே தளத்தின் மூலம் சமர்ப்பிக்க முடியும் என்பதால், பொதுமக்களுக்கான சேவை வழங்கும் நடைமுறைகள் மேலும் திறம்பட அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *