சிலாங்கூரில் டி.ஏ.பி தொகுதிகளை விட்டுக்கொடுக்காது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 18,

சிலாங்கூரின் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பியின் கைவசம் இருக்கும் சட்டமன்றங்களை மற்ற கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காது என இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில டி.ஏ.பி கட்சியின் பேராளர் மாநாட்டில் டி.ஏ.பியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அந்தோணி லோக் உறுதியாகத் தெரிவித்தார். ஆதேவேளையில் சிலாங்கூரில் டி.ஏ.பி பலமாக இருக்கிறது. ஆகையால் தேர்தலில் மேலும் அதிகமான சட்டமன்றத்தையும் கோராது என அந்தோணி லோக் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

நாங்கள் போட்டியிடுவதே எங்கள் முடிவு. மற்ற கட்சிகள் போட்டியிடுவதை நாங்கள் தடுக்கமாட்டோம். அதே போல எங்களையும் தடுக்க வேண்டாம் என வெளிப்படையாக அந்தோணி லோக் எச்சரித்தார். கடந்த 2023 நடைபெற்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி கட்சி 15 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 15 சட்டமன்றங்களிலும் வெற்றி பெற்றது. பி.கே.ஆர் 20 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 12 சட்டமன்றங்களையும் அமானா 9 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 5 சட்டமன்றங்களையும் வென்றது.


டி.ஏ.பி பக்காத்தான் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி என்பதால் பக்காத்தான் தலைமை கூட்டணி அமைக்கவிருக்கும் அரசியல் கட்சிகளுடன் டி.ஏ.பி முழுமையாக ஒத்துழைக்கும் என்றும். ஆனால் தொகுதிப் பங்கீட்டில் டி.ஏ.பியின் கைவசம் இருக்கும் தொகுதிகளை டி.ஏ.பி இழக்கமால் தொகுதிப் பங்கீடுகள் கூட்டணிக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டும் என டி.ஏ.பியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அந்தோணி லோக் உறுதியாக வலியுறுத்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *