சிலாங்கூரிலில் 481 கோயில்களுக்கு நிலம்! - YB பாப்பாராய்டு
- THINAGAREN SANGGAREN
- 06 Jun, 2026
ஜுன் 6,
சிலாங்கூரில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் குறித்து ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு பொதுமக்களுக்கு வலியுறுத்தினார். கடந்த 2008 PAKATAN சிலாங்கூரை ஆட்சி செய்து வரும் நிலையில் இதுவரையில் மொத்தம் 481 இசுலாமிய அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு மாநில அரசின் நிலங்கள் வழங்கப்பட்டிருப்பதாக பாப்பாராய்டு தெரிவித்தார். தாம் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல் கட்டம் கட்டமாக 57 வழிபாட்டு தலங்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் 40 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் பாப்பாராய்டு விளக்கமளித்தார்.
தொடர்ச்சியாக தனது அலுவலகத்தில் கோயில் நிர்வாகத்தினர்களுடன் சந்திப்புகளை நடத்துவதுடன் விண்ணப்பங்களையும் முறையாகப் பூர்த்தி செய்ய வழிவகுக்கப்படுவதாக பாப்பாராய்டு தெரிவித்தார். இவ்வாண்டுக்குள் 500 இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு முழுமையாக நிலம் வழங்கப்பட்டிருக்கும் என பாப்பாராய்டு உறுதியளித்தார். சிலாங்கூரில் அனைத்து சமூகத்தின் சமயத்தையும் முறையாகவும் நெறியோடும் பின்பற்ற வேண்டும் என்பதில் மாநில அரசு முழு கவனத்துடன் செயல்படுகிறது என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



