செலாயாங்கில் சட்டவிரோதமாகக் குடியேறிய 850 வெளிநாட்டினர்கள் கைது! மெந்திரி பெசார் தலைமையில் நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 7,

செலாயாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 850 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari தலைமையிலானச் சிறப்பு அதிகாரிகள் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் Datuk Seri Amirudin Shari நேரில் சென்று வெளிநாட்டினர்களைச் சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செலாயாங் பாருவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் வணிகக் கடைகளிலும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 1,116 வெளிநாட்டினர்களிடம் சோதனையை மேற்கொண்டதாகவும் முறையான ஆவணமற்ற 35 பெண்கள் உட்பட 850 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்கள் 647 பேர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 102 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 79 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 15 பேர் இந்தோனேசியர்கள் என்றும் 10 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முறையானப் பணியிட உரிமம், கடப்பிதழ்கள் இல்லாமை, போலி அடையாள அட்டைகள் என பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை துணை இயக்குநர் Datuk Lokman Effendi Ramli தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களைப் பணிக்கு அமர்த்திய அனைத்து நிறுவன உரிமையாளர்களையும் நிறுவன மேலாளர்களையும் விசாரணைக்கு அழைக்கும்படி சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறைக்குச் சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *