400 லிட்டர் பெட்ரோலைக் கடத்திய இளைஞர் கைது!

top-news

பிப்ரவரி 2,

RM 31,788.00 ரிங்கிட் மதிப்பிலான மானிய விலை பெட்ரோலைத் தாய்லாந்துக்குக் கடத்த முயன்ற மலேசிய இளைஞரை எல்லை பாதுகாப்பு சிறப்புப் படையான PGA கைது செய்தது. 400 லிட்டர் பெட்ரோலை கலன்களில் நிரப்பி TUMPAT சாலை வழியாகக் கடத்தும் போது 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாகனத்தில் 32 கலன்களை நிரப்பி சந்தேகத்திற்குரிய வாகனம் TUMPAT பகுதியில் சுற்றியதைக் கண்டு சோதனையை மேற்கொண்டதாகவும் கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர் TUMPAT மாவட்டக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki berusia 23 tahun ditahan oleh PGA di Tumpat selepas didapati menyimpan 400 liter minyak petrol dalam kenderaan ubah suai untuk diseludup ke Thailand. Rampasan dianggarkan bernilai RM31,788.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *