அனைத்து கல்வி வழிகளிலும் மலாய் மொழி, வரலாறு கட்டாயம்: கல்வி ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் அரசின் முடிவு
- Tamil Malar (Reporter)
- 20 Jan, 2026
புத்ராஜெயா, ஜன. 20-
நாட்டில் செயல்படும் அனைத்து கல்வி வழிகளிலும் கல்வி பெறும் மாணவர்கள், தேசிய அடையாளத்தை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்திய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலாய் மொழி, வரலாறு பாடங்களை எஸ்.பி.எம் (SPM) தேர்வில் கட்டாயமாக்கும் முடிவை அறிவித்தார்.
இந்த முடிவு, தனியார் பள்ளிகள், மதப் பள்ளிகள், ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழ் (UEC) வழியில் இயங்கும் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்தார்.
2026–2035 தேசிய கல்வித் திட்டம் அறிமுக விழாவில் உரையாற்றிய அவர், மொழி தொடர்பான நீண்டகால சர்ச்சைகள் இந்த நடவடிக்கையால் முடிவுக்கு வரும் என்றும், அரசுப் பல்கலைக்கழகங்களில் (UA) சேர்க்கை தொடர்பான நிபந்தனைகள் இனி சர்ச்சையாக மாறாது என்றும் கூறினார்.
“ஒரே நாட்டில் வாழும் நாம், ஒரே வரலாற்றையும் ஒரே தேசிய மொழியையும் புரிந்துகொள்வது அவசியம். இது யாரையும் ஒதுக்கும் நடவடிக்கை அல்ல, அனைவரையும் இணைக்கும் முயற்சி,” என பிரதமர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



