சிரம்பான் நகராண்மை குடியிருப்பில் 81 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

அக்தோபர் 21,

சிரம்பான் நகராண்மைக் கழகத்தின் அரசு குடியிருப்புப் பகுதியை ஆக்கிரமித்து தங்கியிருந்த 81 வெளிநாடினர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று இரவு 10 மணிக்குச் சிரம்பான் இரண்டில் உள்ள Oakland Commerce Square குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அங்கு தங்கியிருந்த 355 வெளிநாட்டினர்களைக் கைது செய்தததாகவும் அவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 81 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Oakland Commerce Square
குடியிருப்புப் பகுதி சிரம்பான் நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமானது என்றாலும் கடந்த 5 ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததால் இந்த வெளிநாட்டினர்கள் ஆக்கிரமித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. Oakland Commerce Square பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 355 வெளிநாட்டினர்களையும் காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டதாகவும் சிரம்பான் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 81 வெளிநாட்டினர்களும் மேலும் விசாரணைக்காகக் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் சிரம்பான் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்