இன்று காலை சிரம்பானில் துப்பாக்கிச் சூடு! இருவர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 10 Dec, 2025
டிசம்பர் 10,
சிரம்பானில் உள்ள ஜாலான் ராசா சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது அடையாளம் காணப்படாத கும்பல் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மைவி வாகனத்திலிருந்த இருவர் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவியது. காணொலியில் வாகனத்திலிருந்த மற்றோர் ஆடவர் தனது வாகனமோட்டி, என்னுடைய பாதுகாவலர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என மயக்க நிலையில் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் இருக்கையில் இருக்கும் ஆடவர் மயங்கிய நிலையில் உடல் முழுவதும் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Azahar Abdul Rahim தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதாகவும் தற்போது முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Azahar Abdul Rahim தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



