சிரம்பான் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! மற்றொருவர் மீது 15 குற்றப்பதிவுகள்! காவல்துறை விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 10 Dec, 2025
டிசம்பர் 10,
இன்று காலை சிரம்பான் டோல் சாவடியிலிருந்து Jalan Rasah செல்லும் சாலையில் வாகனத்தில் வந்த இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குண்டர் கும்பல்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார். இன்று காலை 7.53 மணிக்குத் துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வாகனத்தில் துப்பாக்கிச் சூடுக்குள்ளான இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் வாகனமோட்டியான 43 வயது உள்ளூர் ஆடவர் சிகிச்சை பலனின்றி நண்பகல் 12.45 மணிக்கு உயிரிழந்ததாகவும் நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார்.
வாகனத்தில் இருந்த மற்றோர் ஆடவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மீது 15 குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பல தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வாகனத்தில் அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



