‘அழகே அழகே’ வெற்றி – நக்ஷத்திராவுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி: அன்ஷித்தா
- Surendran Sumdraraj
- 08 Apr, 2026
சென்னை, ஏப். 8-
‘அழகே அழகே’ தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை அன்ஷித்தா, அந்த தொடர் பெற்றுவரும் வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘செல்லம்மா’ தொடர், ‘பிக் பாஸ்’ அனுபவம் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மலையாளம் கலந்த தமிழில் பேசிய அன்ஷித்தா, ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் டாப் 5 தொடர்களின் பட்டியலில் ‘அழகே அழகே’ இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். “இது எங்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி. இந்த அங்கீகாரம் எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது,” என்றார்.
மேலும், இந்த தொடரில் நடிகை நக்ஷத்திரா இணைந்தது குறித்து பேசும்போது, ஆரம்பத்தில் அதைப் பற்றி தெரியவில்லை என அவர் தெரிவித்தார். “பூஜை நிகழ்ச்சிக்கு வேறு ஒருவர் வந்திருந்தார். படப்பிடிப்பு தொடங்கிய பிறகுதான் நக்ஷத்திரா இந்த தொடரில் நடிக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்தது. அதை அறிந்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது,” என்று அன்ஷித்தா கூறினார்.
தொடரின் வெற்றிக்கும், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



