கூட்டணி அமைக்கிறதா பெர்சாமா? - கட்சி விளக்கம்
- Shan Siva
- 04 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 4: வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெர்சாத்து, மூடா மற்றும் முக்ரிஸ் மகாதீரின் பெஜுவாங் கட்சிகளுடன் பெர்சாமா கூட்டணி அமைக்கும் என்ற வதந்திகளை ரஃபிஸி ராம்லியின் பெர்சாமா மலேசியா கட்சி நிராகரித்துள்ளது.
நேற்று இரவு இரண்டு பெர்சாத்து தலைவர்களால் பரப்பப்பட்ட இந்த வதந்திகள் உண்மையல்ல என்று பெர்சாமா தலைவர் சுக்ரி ரசாப் கூறினார்.
பெர்சாமா தனித்துப் போட்டியிடுவதிலும், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடுவதிலும் கவனம் செலுத்துகிறது, என்று அவர் கூறினார்.
ஜொகூர் தேர்தலுக்கான சாத்தியமான கூட்டணி குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் தங்கள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மூடா கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ரசித் அபு பக்கார் கூறினார்.
பெர்சாமா, பெர்சாத்து, மூடா மற்றும் பெஜுவாங் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்த வதந்திகள், இரண்டு பெரசாத்து தலைவர்களால் வெளியிடப்பட்ட மர்மமான முகநூல் பதிவுகளால் பரவின.
பெர்சாத்து சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர் ரஃபிக் அப்துல்லா வெறுமனே "பெஜுவாங்-முடா-பெர்சாமா-பெர்சாத்து" என்று பதிவிட்டுள்ளார், அதே நேரத்தில் இடைக்கால பாடாங் ரெங்காஸ் பெர்சாத்து தலைவர் சைஃபுல் அட்லி அர்ஷாத் நான்கு கட்சிகளில் இருந்தும் பல தலைவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



