பக்காத்தான் விட்டுவைத்த தொகுதிகளில் பெர்சாத்து போட்டியா?!

top-news

கோலாலம்பூர், அக் 27: மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்டோபர் 29ஆம் தேதி அறிவிக்கப்போவதாக பெர்சாத்து தலைவர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணியாகப் போட்டியிடுமாஎன்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை. பக்காத்தான் ஹராப்பான் அறிவிக்காமல் விட்டுள்ள ஏழு தொகுதிகளில் பெர்சாத்து போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பெர்சாத்து தேர்தலில் போட்டியிட அதன் உச்சமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக முஹிடின் கூறினார். எனினும், போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட சில விவகாரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பெரிக்காத்தான் நேஷனலும் அதே நாளில் தனது வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது. மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்