பக்காத்தானில் பெர்சாத்துவா?! - அன்வார் விளக்கம்
- Shan Siva
- 11 Jun, 2026
டோக்கியோ, ஜூன் 11: பெர்சாத்து கட்சி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் மீண்டும் இணையக்கூடும் என்ற யூகங்களை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். கட்சிகள் பிரிந்து மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் அரசியல் உறவுகளில் தனது கூட்டணிக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த வதந்திகளைத் தாம் கேள்விப்படவில்லை என்றும், கூட்டணியின் அணுகுமுறை அரசியல் சூழ்ச்சிகளை விட கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் கூறினார்.
தம்மைப் பொறுத்தவரை, பிரிந்து மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் ஒரு அரசியல் திருமணம் எங்கள் வழியல்ல என்று ஜப்பானுக்கான தனது மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கூறினார்.
பாஸ் கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பு முறிந்ததைத் தொடர்ந்து, பெரசாத்து கட்சி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைய முயலக்கூடும் என்ற கூற்றுக்களுக்கு அன்வார் இவ்வாாறு பதிலளித்தார்.
மாநில அளவில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்திய அளவில் உள்ள ஒற்றுமை அரசாங்கம் நிலையானதாக இருப்பதாகவும், அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள தற்போதைய கூட்டாளிகளுக்குத் துரோகம் செய்வதாகக் கருதப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் தான் ஈடுபடப் போவதில்லை என்று அன்வர் வலியுறுத்தினார்.
அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாக்க, தற்போதைய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



