அம்னோ துணையமைச்சர் மீது DAP நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி! பதவி விலக வலியுறுத்து
- Shan Siva
- 17 Nov, 2026
கோலாலம்பூர், நவ 17: பொதுப்பணித்துறை துணை அமைச்சர் அஹமட் மஸ்லான், நாடாளுமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது அரசியல் ரீதியாகப் பேசியது ஒற்றுமை அரசாங்கத்துக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பேச்சு குறித்து அதிருப்தி தெரிவித்த போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அமினுடின் ஹருன் உள்ளிட்ட பக்காத்தான் ஹராப்பான் உறுப்பினர்கள், அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் துணை அமைச்சர் அரசியல் விமர்சனங்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றனர்.
அரசாங்கத்தின் செயல்பாடுகளில் அவருக்கு உடன்பாடு இல்லையென்றால் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மெலாக்கா தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்துக்குள் உருவாகியுள்ள கருத்து வேறுபாடுகள் இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

