ஊழல் வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஷம்சுல் இஸ்கந்தர் மேல்முறையீடு
- Surendran Sumdraraj
- 08 May, 2026
பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளரான டத்தோ ஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர், தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளை அமர்வு நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவை நிராகரித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி நூர் ரூவேனா முகமட் நூர்டின், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 417-ன் கீழ் தேவையான நிபந்தனைகளை மனுதாரர் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்து, ஷம்சுல் இஸ்கந்தரின் மனுவை நிராகரித்தார்.
இந்த வழக்கு இன்று அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஷம்சுல் இஸ்கந்தரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ அமர் ஹம்சா அர்ஷாட், கடந்த மே 6ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மேல்முறையீட்டு நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



