காவ்யா மாறனுடன் காதலா? உண்மையை உடைத்த அனிருத்!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் வரிசையாக இசையமைத்து வருகிறார்.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி', விஜயின் 'ஜனநாயகன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். அதே வேளையில் மற்ற ஹீரோக்களின் படங்களிலும் இசையமைக்கிறார். அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி', பிரதீப் ரங்கநாதனின் லல் இன்சூரன்ஸ் கம்பேனி உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக இவரின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகி வந்த வண்ணம் இருந்தன. அதன்படி, இவர் ஐபிஎல் கிரிகெட் தொடரில் உள்ள ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறனை திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீயாக பரவியது.

இந்த நிலையில் தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், கல்யாணமா? ஹாஹா.கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே,வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்'இவ்வாறு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *