சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி? ‘ராமாயணா’ படக்குழு எடுத்ததாகக் கூறப்படும் முக்கிய முடிவு
- Surendran Sumdraraj
- 14 May, 2026
நடிகை Sai Pallavi பாலிவுட்டில் சந்தித்த சமீபத்திய பின்னடைவுகளுக்கு மத்தியில், அவர் நடித்து வரும் பிரம்மாண்டமான “Ramayana” திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் Nitesh Tiwari இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகி வருகிறது. முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுக திரைப்படமான “ஏக் தின்” எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் ரூ.15 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ள அந்த படம், வசூலில் பின்னடைவைச் சந்தித்ததாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், “ராமாயணா” படத்தில் சாய் பல்லவிக்கான டப்பிங்கில் வேறு குரலை பயன்படுத்த படக்குழு யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் அவரது இந்தி உச்சரிப்பு குறித்து சில விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



