ஆசியக் கோப்பை 2025: மலேசிய மகளிர் குழு தங்கம்!

- Muthu Kumar
- 21 Jun, 2025
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, அம்பு விடுதல் போட்டியில் மலேசிய மகளிர் குழு தங்கப் பதக்கத்தை வென்றது.ஃபாடின் நூர்பதேஹா மாட் சல்லே. சரிதா சாம் நோங், இங் சுய் கிம் ஆகிய மூவர் அடங்கிய இந்த அணி, இறுதிப் போட்டியில் அற்புதமான திறனை வெளிப்படுத்தி மலேசியாவிற்கு பெருமை சேர்த்தது. இந்த வெற்றி. மலேசிய அம்பு விடுதல் விளையாட்டில் அவர்களின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
இறுதிப் போட்டியில், மலேசிய அணி கடுமையான போட்டியை எதிர்கொண்டது. ஆனால் அவர்களின் நுல்லியமான அம்பு எய்தல், குழு ஒற்றுமையால் வெற்றியை உறுதி செய்தனர்.ஃபாடின் நூர்பதேஹா, அணியின் முக்கிய வீராங்கனையாக, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இந்தப் போட்டியில் மலேசிய அணி முதல் சுற்றில் இருந்து ஆதிக்கம் செலுத்தியது. அரையிறுதிக்கு முன்னேறி, இறுதியில் தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது.
மலேசிய அம்பு விடுதல் கூட்டமைப்பு, இந்த வெற்றியை மலேசிய விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதுகிறது. வீராங்கனைகள் கடுமையான பயிற்சியையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியத்தின் விளைவாக இந்த வெற்றி சாத்தியமானது என அம்பு விடுதல் அணியின் பயிற்றுநர் தெரிவித்தார். இந்த வெற்றி, தாய்லாந்தில் நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டிகளுக்கு மலேசிய அணியைத் தயார்படுத்துவதற்கு ஒரு முக்கியமான தளமாக அமைந்தது.
இந்தப் பதக்கம், இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்து, மலேசியாவில் குழுமுறை அம்பு விடுதல் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mereka Malaysia memenangi pingat emas acara memanah berpasukan wanita di Piala Asia Singapura. Pasukan yang terdiri daripada Fatin Nurfatehah, Saritha Sam Nong, dan Eng Sueh Kim mempamerkan ketepatan dan semangat berpasukan, mengukuhkan dominasi Malaysia dalam sukan ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *