அனுமதியில்லாமல் பேசிய சர்ச்சைக்குரிய Zakir Naik மீது விசாரணை வேண்டும்! – M. KULASEGARAN வலியுறுத்து!

top-news

பிப்ரவரி 8,

மலேசியாவில் ZAKIR NAIK சொற்பொழிவாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்து பெர்லீசில் அவர் சொற்பொழிவாற்றியது எப்படி எனும் கேள்வியைத் துணை அமைச்சரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான M. KULASEGARAN கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக முன்னமே உள்துறை அமைச்சர் Saifuddin Nasution-உடன் பேசியதாகவும் உள்துறை அமைச்சு சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதாகவும் துணை அமைச்சர் M. KULASEGARAN தெரிவித்தார்.

தொடர்ந்து இஸ்லாம் அல்லாதவர்கள் மீதும் குறிப்பாக இந்து மதத்தினர் மீது அவதூறுகளைப் பரப்பும்படியானச் சொற்பொழிவுகளை ஆற்றிய Zakir Naik மீது உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கும்படியும் சட்டச் சீர்த்திருத்த அமைச்சின் துணை அமைச்சர் M. KULASEGARAN வலியுறுத்தினார்.

M. Kulasegaran mempersoalkan bagaimana Zakir Naik boleh menyampaikan ceramah di Perlis walaupun dilarang di Malaysia. Beliau menggesa Kementerian Dalam Negeri menyiasat perkara ini serta mengambil tindakan terhadap Zakir Naik kerana didakwa menyebarkan kenyataan berunsur kontroversi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *