‘ஒப்ஸ் சுத்ரா’ விசாரணை நிறைவு: பொது நிதி முறைகேடு வழக்கில் விரைவில் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலா திரங்கானு, ஜூன் 8 –

உயர்மட்ட பொது நிதி முறைகேடு தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) மேற்கொண்டிருந்த ‘ஒப்ஸ் சுத்ரா’ (Ops Sutra) விசாரணை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் மீது விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SPRM தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறுகையில், இந்த வழக்கு மலேசிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 409-இன் கீழ் நம்பிக்கை மோசடி (Criminal Breach of Trust) குற்றச்சாட்டிற்காகச் சட்டத் தலைமை அலுவலகத்திற்கு (AGC) அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

“இந்த வாரத்திலேயே எங்கள் அதிகாரிகள் இந்த விவகாரத்தை சட்டத் தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரைப்பார்கள். அங்கீகாரம் கிடைத்தால் விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

விசாரணையின் போது, ஒரு நிறுவனம் மூலமாக குறிப்பிட்ட அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு (NGO) வழங்கப்பட்ட பொது நிதியில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *