வங்கியில் துப்பாக்கிச் சூடு! சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை!
- Thinagaren Sanggaren
- 16 Feb, 2026
பிப்ரவரி 16,
வங்கியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்திருப்பதாகவும் வங்கியின் கண்ணாடி கதவுகள் நொருங்கியிருக்கும்படியானப் புகைப்படங்கள் சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகச் சரவாக் சிபூ மாவட்டக் காவல் ஆணையர் Zulkipli Suhaili தெரிவித்தார். நேற்று மாலை 3 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் சிபூ Jalan Lanang சாலையில் அமைந்துள்ள வங்கிக்குக் காவல்துறையினர் விரைந்ததாக Zulkipli Suhaili தெரிவித்தார்.
சம்வத்தை நேரில் கண்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வங்கியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன் அங்கிருந்து தப்பியதாக அறியப்படுகிறது என Zulkipli Suhaili தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் சம்மந்தப்பட்ட இருவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைக் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாகவும் இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் Zulkipli Suhaili உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



