சைமா அவார்ட்ஸ் 2026: 6 விருதுகளை அள்ளிய ‘டூரிஸ்ட் பேமிலி’
- Surendran Sumdraraj
- 18 Sep, 2026
சென்னை: 2026-ஆம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், சசிகுமார் – சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் 2025-ஆம் ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’, தமிழகத்தில் அடைக்கலம் தேடும் ஈழ அகதிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. குடும்ப உணர்வு, நகைச்சுவை மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சைமா விருது விழாவில் விமர்சகர்கள் பிரிவில் சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் ஆகிய 6 பிரிவுகளில் ‘டூரிஸ்ட் பேமிலி’ விருதுகளை வென்றுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



