மலாய் அரசியல் பிளவு: மகாதீர் கடும் விமர்சனம்
- Surendran Sumdraraj
- 02 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 2-
மலாய் சமூகத்தினர் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டிருப்பது ஒரு பெரிய தவறு என முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று பல மலாய் அடிப்படையிலான அரசியல் கட்சிகள் உருவாகி, அதனால் மலாய் அரசியல் பலவீனமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் மலாய்க்காரர்கள் தங்களுக்குள் போட்டியிட்டு, ஒருமைப்பாடு இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“இன்று பலர் UMNO தான் பிரிட்டிஷாரை தோற்கடித்தது என்று நினைக்கிறார்கள். அதனால் கட்சிகள் உருவானால் வெற்றி கிடைக்கும் என்று கருதி பல கட்சிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இது மலாய்காரர்களைப் பிளவுபடுத்தியது,” என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறினார்.
மேலும், இவ்வாறான பிளவு காரணமாக மலாய்க்காரர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாருக்கும் உண்மையான வெற்றி கிடைக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
இது தொடர்ந்தால் நாடு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், “நாடு கைவிடப்படும் நிலை உருவாகும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இறுதியாக, மலாய் சமூகத்தினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், இது அவர்களின் கடைசி போராட்டமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



