RM 7மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் கும்பல் கைது!

- Sangeetha K Loganathan
- 10 Mar, 2025
மார்ச் 10,
ஜொகூரில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 2 கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். ஜொகூரின் Seri Alam , Johor Bahru என இரு வெவ்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டதில் 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக Datuk M Kumar தெரிவித்தார்.
முதல் சோதனையில் 32.2 கிலோ Ekstasi, 13.50 கிராம் syabu, Eramin வகை போதைப்பொருள்களுடன் 17 வயது இளைஞரும் இளம்பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் திருடப்பட்ட வாகனமும் RM 3,659 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சோதனையில் RM 15,450 ரொக்கமும், 9.28 கிலே Ekstasi, 74கிராம் ketamin, 90 eramin மாத்திரைகளுடன் 2 உள்ளூர் ஆடவர்களும் வியட்னாமைச் சேர்ந்த 25 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக Datuk M Kumar தெரிவித்தார்.
Polis Johor menumpaskan dua sindiket dadah yang mencampurkan pelbagai jenis bahan terlarang dalam satu paket seperti ‘koktail’, bernilai hampir RM7 juta. Tujuh individu ditahan dalam operasi khas dengan dadah yang dirampas mampu digunakan oleh lebih 138,000 penagih.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *