RM1.16 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் இருவர் கைது!
- Sangeetha K Loganathan
- 05 Mar, 2025
மார்ச் 5,
பினாங்கில் போதைப்பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 32 வயது உள்ளூர் ஆடவரும் 42 வயது வெளிநாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார். இரவு 8.34 மணிக்கு வணிகக் கடைக்கும் முன் சந்தேகத்திற்குரிய ஆடவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 19,700 மில்லிலிட்டர் அளவிலான MDMA வகை போதைப்பொருளும் 627 கிராம் எடையுள்ள போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்சியாக அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் போதைப்பொருளுடன் 42 வயது வெளிநாட்டுப்பெண் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து 265 பாக்கெட்டுகளில் MDMA போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இருவரும் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.
Polis Pulau Pinang membongkar sindiket dadah dengan merampas dadah bernilai lebih RM1.16 juta dan menahan dua suspek di Jelutong. Rampasan termasuk MDMA dalam pelbagai bentuk dan boleh digunakan oleh 35,000 penagih. Kedua-dua suspek direman dan disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



