பாடகி தீயின் புதிய இசை ஆல்பம் ‘வரி வரி’ – வெளியீடு நாளை
- Surendran Sumdraraj
- 23 Apr, 2026
தமிழ் இசை உலகில் தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்த Dhee (தீ), தனது புதிய இசை ஆல்பமான ‘வரி வரி’ வெளியீட்டை முன்னிட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா நாளை இலங்கையின் கொழும்பில் நடைபெற உள்ளது.
இலங்கையில் பிறந்து, பின்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது இசைப் பயணத்தை வளர்த்த தீ, உலகளவில் தனித்துவமான குரலுடன் முன்னணி கலைஞராக உருவெடுத்துள்ளார். பாரம்பரிய தமிழ் இசை வேர்களையும், உலக இசை பாணியையும் இணைக்கும் அவரது கலைப்பாணி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘என்ஜாய் என்ஜாமி’ போன்ற உலகப் புகழ்பெற்ற பாடலின் மூலம் தீ பெரும் பிரபலமடைந்தார். அந்தப் பாடல் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று, இந்திய சுயாதீன இசையை உலக அளவில் எடுத்துச் சென்ற முக்கியமான படைப்பாக அமைந்தது.
மேலும், பல விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்றுள்ள தீ, “I Wear My Roots Like A Medal”, “Can’t You Stay A Little Longer” போன்ற பாடல்கள் மூலம் தனது இசை பரிமாணத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



