மு.க.ஸ்டாலின் தோல்விக்கு ‘எஸ்.ஐ.ஆர்’ காரணம்? - ஜெகன் மோகன் ரெட்டி

top-news
FREE WEBSITE AD

அமராவதி, மே 29-

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் M.K. Stalin மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர் Mamata Banerjee ஆகியோரின் தேர்தல் தோல்விக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) முக்கிய காரணம் என ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான Jagan Mohan Reddy குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் விரைவில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக தாடேபள்ளியில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “ஒவ்வொரு தொகுதியிலும் சிறிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டாலும் அது தேர்தல் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் அதற்குச் சான்று” என்று கூறினார்.

மேலும், “மேற்கு வங்காளத்தில் Mamata Banerjee போட்டியிட்ட Bhabanipur தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் தமிழ்நாட்டில் M.K. Stalin போட்டியிட்ட Kolathur தொகுதியிலும் SIR நடவடிக்கையால் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன் விளைவாக இருவரும் தோல்வியடைந்தனர்” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *