பூப்பந்து விளையாட்டு 15 புள்ளி கணக்கீட்டு முறைக்கு மாறுமா?

top-news

கோலாலம்பூர், பிப். 13-

உலக பேட்மிண்டன் பேரவை (BWF) போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ வடிவமாக 15 புள்ளி கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவை ஆதரிக்க வேண்டுமா என்பது குறித்து, மலேசிய பேட்மிண்டன் சங்கம் (BAM) முதலில் தேசிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவின் கருத்துகளைப் பெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

BAM பொதுச் செயலாளர் டத்தோக் கென்னி கோ கூறுகையில், BWF ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) ஏப்ரல் 25 அன்று டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக  ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகே சங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் என்றார்.

“BAM சார்பில், பொதுக்கூட்டத்திற்கு செல்லும் முன், வீரர்களுடனும் பயிற்சியாளர்களுடனும் உள்ளக கலந்துரையாடல் நடத்தி, அதன் பின்னரே முடிவு எடுப்போம்,” என அவர் அகாடெமி பேட்மிண்டன் மலேசியா (ABM) வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில் BWF, 15 புள்ளி (மூன்று செட்) முறையை போட்டிகளில் பயன்படுத்தும் முன்மொழிவை AGM-இல் வாக்கெடுப்புக்கு கொண்டு செல்ல BWF கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியது.

இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டால் போட்டியின் நேரம், வீரர்களின் தந்திரம் மற்றும் பார்வையாளர்களின் அனுபவம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *