ஹாரன் அடித்தது குற்றமா? மோட்டார் சைக்கிளோட்டியைக் கத்தியால் வெட்டிய நபர்! - ஃபெடரல் ஹைவேயில் பரபரப்பு

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூன் 12:  ஷா ஆலம், செக்ஷன் 13 அருகே, ஃபெடரல் நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்  கத்தியால் வெட்டப்பட்டார்.

காலை 7 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தின்போது, ​​வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 45 வயதான பாதிக்கப்பட்டவர், தனது மோட்டார் சைக்கிளால் பாதையை மறித்த சந்தேக நபரைப் பார்த்து ஹாரன் அடித்ததாக ஷா ஆலம் காவல் துறைத் தலைவர் சருதின் சமா கூறினார்.

பின்னர், 43 வயதான சந்தேக நபர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, பாதிக்கப்பட்டவரைக் கசாப்புக் கத்தியால் வெட்டினார்  என்று சருதின் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது நிலை சீராக இருப்பதாகவும் சருதின் கூறினார்.

ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிகள் மூலம் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324-இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல் தெரிந்த எவரும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *