பன்றி வளர்க்க அரசு நிதியா?!- சிலாங்கூர் மந்திரி பெசார் மறுப்பு
- Shan Siva
- 13 Jan, 2026
ஷா ஆலம், ஜன 13: சுற்றுச்சூழல் மாசுபாட்டுடன்
தொடர்புடைய பாரம்பரிய நடவடிக்கைகளை நிறுத்த சிலாங்கூர் அரசு நடவடிக்கை எடுத்து
வரும் நிலையில், பன்றி வளர்ப்பை
நவீனமயமாக்குவதற்கு சிலாங்கூர் அரசு மாநில நிதியையோ அல்லது நிலத்தையோ ஒதுக்கவில்லை
என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் நிதி அல்லது
நிலம் இதில் ஈடுபடவில்லை என்று குறிபிட்ட அவர், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து நிலங்களும் தனியார் துறையின்
கீழ் உள்ளன என்று அவர் இன்று ஒரு நிகழ்வில்
செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், கோலா லங்காட்டில் உள்ள பாரம்பரிய பன்றி
பண்ணைகளை மூடுவதே மாநிலத்தின் உடனடி முன்னுரிமை என்று அமிருதீன் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



