தகுதி இல்லாத நபர் எதிர்க்கட்சி தலைவர் என்று சுற்றுவதா?! - முகைதீன் கோபம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 6: பெரிகாத்தான் நேஷனல்  உச்ச மன்றம் ஒரு புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கத் தவறியது குறித்து பெர்சத்து கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேவேளையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், தனது பதவியைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். பதவிக்கு ஒரு வேட்பாளரைப் பரிந்துரைத்து கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று  டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் கூறினார்.

இருப்பினும், இனி தகுதி இல்லாத அந்த நபர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற தனது பதவியைப் பயன்படுத்தி நாட்டின் மூலைமுடுக்குகளில் தொடர்ந்து பயணம் செய்து வருகிறார் என்று முகைதீன் கூறினார்.

பதவி காலியாக இருந்தால், அதை நிரப்ப வேண்டாமா? பொருத்தமான வேட்பாளர் இல்லையா? ஏற்கனவே ஒரு வேட்பாளர் இருக்கும்போது, ​​நாடாளுமன்றம் கூடும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரைப் பரிந்துரைக்க, பிஎன் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுதீன் ஹசன், மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதலாம் என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை  பாகோ இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற பாகோ நாடாளுமன்ற பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு  பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்படும் தாமதம், பொதுமக்களின் பார்வையில் பி.என்-இன் செல்வாக்கையும் நற்பெயரையும் சேதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று முஹைதீன் மேலும் கூறினார்.

இது பெர்சாத்துவின் உரிமை மட்டுமல்ல, பாஸ், கெராக்கா அல்லது எம்.ஐ.பி.பி கட்சியின் உரிமையும் ஆகும் என்று கூறினார்.  இது பி.என்-இன் உரிமை என்று தெரிவித்தார்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பி.என் நிறுவப்பட்டதிலிருந்து நான் அதை வழிநடத்தி வருகிறேன். இது ஒரு கடினமான விஷயம் அல்ல என்பதை நான் அறிவேன். ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிட்டால், அது தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

பி.என் உச்ச மன்றம், குறிப்பாக பொதுச் செயலாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட பி.என் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் ஆகியோர் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு கூடிய விரைவில் தீர்க்க வேண்டும் என்று அவர் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை, பாஸ் கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கும் சம்சுரி, நியமன செயல்முறை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அது விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த முடிவை இறுதி செய்வதற்கு முன்பு பல முக்கிய செயல்முறைகள் முடிக்கப்பட வேண்டும் என்றும், இந்தத் தாமதத்திற்குக் காரணம் தலைமைத்துவத்தினரிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அல்ல, மாறாக கவனமான ஆலோசனைக்கான விருப்பமே என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *