RM 50 மில்லியன் லஞ்சம் பெற்றேனா? Sivamalar Genapathy விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 23 Dec, 2025
டிசம்பர் 23,
பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafaவின் அரசியல் செயலாளராக இருந்த Sivamalar Genapathy புகையிலை, மின் சிகரெட் தொடர்புடைய ஒரு நிறுவனத்திடமிருந்து RM 50 மில்லியன் லஞ்சம் பெற்றதாக வெளிவந்த செய்தியில் அடிப்படை உண்மையில்லை என மறுத்துள்ளார். Datuk Seri Dr Zaliha Mustafa சுகாதார அமைச்சராக இருந்த போது அவரின் சிறப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்த பி.கே.ஆரின் துணைப் பொதுச்செயலாளர் Sivamalar Genapathy இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கேட்ட போது, இது கடந்த டிசம்பர் 18, Datuk Seri Dr Zaliha Mustafaவுக்குத் தாம் எழுதிய ஒரு நன்றி கடிதத்தில் இது ஒரு தனியார் நிறுவனம் Datuk Seri Dr Zaliha Mustafaவை சந்திக்க விருப்பம் தெரிவித்த போது, சந்திப்பிற்கான நோக்கத்தைத் தாம் அறிய முனைந்ததாகவும் அப்போது மின்சிகரெட்டுகள் புகையிலை தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து அந்த தனியார் நிறுவனம் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என கேட்ட போது, அப்படியான ஒரு சந்திப்பை Datuk Seri Dr Zaliha Mustafa மறுத்ததாகவும் நான் எனது நன்றி கடிதத்தில் எழுதியிருந்தேன். அந்த நீளமானக் கடிதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே சமூகவலைத்தலங்களில் பரவியதால் இந்த குழப்பம் ஏற்பட்டிருப்பதாக Datuk Seri Dr Zaliha Mustafaவின் முன்னாள் அரசியல் செயலாளர் Sivamalar Genapathy தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்த தவறான உள்ளடக்கங்களைப் பகிர்ந்த சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் மேலும் இது தொடர்புடைய தெளிவுகளுக்காக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திலும் விளக்க அறிக்கையைத் தாம் தாக்கல் செய்யவிருப்பதாக Sivamalar Genapathy தெரிவித்தார். உண்மையில் Datuk Seri Dr Zaliha Mustafa சுகாதார அமைச்சராகவும் கூட்டரசு அமைச்சராகவும் பொறுப்பிலிருந்த போது எந்த்வொரு தருணத்திலும் வலைந்து கொடுக்காமல் நேர்மையுடன் செயல்பட்டதையே தாம் அந்த நன்றிக் கடிதத்தில் குறிப்பிட விரும்பியதாகப் பி.கே.ஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான Sivamalar Genapathy விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



