‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக பரப்பிய 6 பேர் கைது

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூன் 5 –

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் Jananayagan திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றி பரப்பியதாகக் கூறப்படும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே அதன் முழு காட்சிகளும் பல்வேறு இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக பகிரப்பட்டதாகத் தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்திருந்தது. இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, திரைப்படத்தை அனுமதியின்றி பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியதுடன், பல்வேறு டெலிகிராம் குழுக்கள் மற்றும் இணைய தளங்கள் மூலமாக பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் 6 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மடிக்கணினிகள், கைப்பேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *