தமிழ்ப்பள்ளிகளில் 300 புதிய ஆசிரியர்கள் நியமனம்! - கல்வி அமைச்சு!
- Thinagaren Sanggaren
- 29 Nov, 2025
நவம்பர் 29,
இந்த ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் 300 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் செய்யப்படும் நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு 300 புதிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. கல்வி அமைச்சு தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை அறிந்திருப்பதாகவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முக்கிய நகர்வுகளை மேற்கொள்ளும் என நம்பிக்கை அளித்துள்ளது.
கல்வி நிர்வாகக்
கொள்கையின்படி 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்ப்பள்ளிகளுக்கு 1,417 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்
என கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றங்களுக்கான
விண்ணப்பங்களைக் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் முழுமையாக விண்ணப்பிக்கலாம் எனும்படியாக
அமைக்கப்பட்டிருப்பதாகவும் புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்களும் ஆண்டு இரு முறை தடையில்லாமல்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களில் அடிப்படையில் இந்த ஆண்டு 300 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதைக்
கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



