தேசிய வகை ஆர்வாட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியில் சீருடை இயக்க முகாம் 2025
- Tamil Malar (Reporter)
- 28 Nov, 2025
செய்தி-தி. கிரிஷன்
குருண், நவ 27 -
தேசிய வகை ஆர்வாட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியில் சீருடை இயக்க முகாம் கடந்த வியாழக்கிழமையன்று பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் இளைஞர் அணி (Kadet Remaja Sekolah) அணியைச் சேர்ந்த மொத்தம் 41 மாணவர்களும், 10 வழிகாட்டி ஆசிரியர்களும் இதில் பங்கேற்று சீருடை இயக்க முகாமைச் சிறப்பித்தனர்.
இம்முறை புறப்பாட நடவடிக்கை துணைத்தலைமையாசிரியர் திரு சௌ. தனராஜு அவர்களின் தலைமையில் இம்முகாம் சிறப்பான வகையில் திட்டமிட்டு, துல்லியமாகவும் திறம்படவும் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் காட்டிய ஒருங்கிணைப்பானது முகாம் முழுவதும் சீராக நடைபெறுவதற்குக் காரணமாக இருந்தது. மேலும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் தேவையான ஆதரவினை வழங்கி முகாமின் வெற்றிக்குத் துணைநின்றது.
சீருடை இயக்க முகாம் நடத்தப்பட்டதன் நோக்கமானது , மாணவர்களின் சுய ஒழுக்கத்தை மேம்படுத்துவதும், குழுப் பணியின் அவசியத்தை அவர்களிடத்தில் உணர்த்துவதும், சவாலான சூழல்களில் தன்னம்பிக்கையுடன் பிரச்சணைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதற்கும் நடத்தப்பட்டது. இந்நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அடிப்படை அணிவகுப்புகள், காட்டில் சமையல் போட்டிகள், அவசரநிலை பயிற்சிகள், தீவிர நடவடிக்கைகள், தீப்பந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறை செயல்பாடுகள் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.
ஆசிரியர் கண்காணிப்பின் கீழ் அனைத்து செயல்பாடுகளும் நேர்த்தியாக நடைபெற்றன. சீருடை இயக்க முகாமின் முடிவில் மாணவர்களின் குணநலன்கள், தலைமைத்துவ திறன் சுயநிறைவு ஆகியவை கணிசமாக வளர்ந்திருந்தது உணரப்பட்டது. எதிர்காலத்திலும் இத்தகைய முகாம்கள் மாணவர்களின் திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இதைத் தொடர்ந்து நடத்தும் முயற்சி தொடரும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



