சுங்கை மூவார் தமிழ்ப்பள்ளியின் சிக்கல் விரைவில் தீர்க்கப்படும்! செகாமாட் MP யுனேஸ்வரன் உறுதி!
- Thinagaren Sanggaren
- 22 Dec, 2024
டிசம்பர் 22,
செகாமாட்டில் அமைந்துள்ள சுங்கை மூவார்
தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நில விவகாரம், உள்கட்டமைப்புப்
போன்ற சிக்கல்கள் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்துடனும் பள்ளி ஆசிரியர்கள் ஆதரவாளர்களுடனும்
செகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு.யுனேஸ்வரன் ராமராஜ் ஒரு சிறப்புச் சந்திப்பை
நடத்தினார். இச்சந்திப்பில் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் திரு.சுப்ரமணியன் ராகவன், சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்
தலைமை ஆசிரியர் திருமதி பிரேமா ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளியின் முக்கிய சிக்கலாக விளங்குவது
நில விவகாரம் என்கிற நிலையில் பள்ளிக்கானப் புதிய நிலத்திற்கான உரிமத்தைக் கடந்த
2022 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வழங்கினாலும் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கவும் ஆயுத்தமாகியுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்
சிக்கல்களைச் சுமூகமாகத் தீர்க்க கல்வி அமைச்சருடன் முன்னமே தாம் வலியுறுத்தியிருப்பதாகவும்
அதிகாரிகளிடமும் இது தொடர்பாகத் தாம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். சுங்கை மூவார்
தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சிக்கல்களைத் தீர்க்க கல்வி அமைச்சு தாமதப்படுத்துமாயின்
இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் தன் குரல் ஒலிக்கும் என செகமாட் நாடாளுமன்ற உறுப்பினர்
மாண்புமிகு.யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
குறுகிய காலத்திட்டத்திற்கானச் சிக்கல்களை நாடாளுமன்றத்தின்
மூலமாகத் தீர்க்கவும் கல்வி அமைச்சின் அதிகாரத்திற்குட்பட்ட சிக்கல்களைக் கல்வி அமைச்சர்
மூலமாகவும் தீர்க்கப்படும் எனும் நம்பிக்கையைச் சுங்கை
மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வாகத்திற்கு அவர் வழங்கினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



