மலேசியாவில் 200-ஆவது திருவள்ளுவர் சிலை! – சீபில்டு தமிழ்ப்பள்ளி!
- THINAGAREN SANGGAREN
- 21 Jul, 2026
ஜூலை 21,
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.ஜி.பி நிறுவனத்தின் திருவள்ளுவர் சிலை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை சிலாங்கூர் சீபில்ட் தமிழ்ப்பள்ளியில் விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவைக் கடந்து உலக நாடுகளில் திருவள்ளுவர் உருவச் சிலைகளை வழங்கி வரும் வி.ஜி.பி நிறுவனத்தின் இயக்குநரும் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான வி.ஜி. சந்தோசம் தலைமையில் இன்று மலேசியாவில் 200 ஆவது திருவள்ளுவர் உருவச் சிலை நிருவப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநர் ஓம்ஸ் பா தியாகராஜன், மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் தமிழ்த்திரு. ப.கு.சண்முகம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.மல்லை சத்தியா, உலகத் தமிழ்ப்பானண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் இராஜ ரத்தினம், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் திரு.க.முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிமொழி முன்னாள் உதவி இயக்குநர் செங்குட்டவன், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் துணைச் சபாநாயகர் மாண்புமிகு ரவி, சீபில்ட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், வாரியக் குழுவினர், அசிரியர்கள் மாணவர் பங்கேற்றனர்.
மாதா பிதா குரு தெய்வம் எனும் தரவரிசையில் திருக்குறளையும் நாம் அங்கீகரிக்க வேண்டும் என வி.ஜி.பி நிறுவனத்தின் இயக்குநரும் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான வி.ஜி. சந்தோசம் கேட்டுக்கொண்டார். மலேசியாவில் 200 ஆவது திருவள்ளுவர் உருவச் சிலையை நிருவியதுடன் என் கடமை நிறைவேறிடவில்லை. இன்னும் ஆயிரம் திருவள்ளுவர் சிலைகளை நாம் நிருவவிருப்பதாக வி.ஜி.பி நிறுவனத்தின் இயக்குநரும் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான வி.ஜி. சந்தோசம் தெரிவித்தார்.
திருவள்ளுவரின் உருவச் சிலை செதுக்கியது முதல், மலேசியாவில் உள்ள பள்ளிகளுக்குச் சிலைகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சியை முன்னெடுத்த்த மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் தமிழ்த்திரு. ப.கு.சண்முகம் அவர்களுக்கு மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.மல்லை சத்தியா உளமார்ந்த நன்றி நவில்ந்தார். கடந்த 2 நாள்களாக ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிகளுக்கும் எங்களை அழைத்துச் சென்று மாணவர்களோடு அருமையான ஒரு பொழுதை ஏற்பாடு செய்துள்ள ப.கு.சண்முகம் அவர்களின் தமிழ்த்தொண்டு நிறைவாக இருந்ததாக திரு.மல்லை சத்தியா தெரிவித்தார்.
திருவள்ளுவரின் உருவச் சிலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தை ஓம்ஸ் பா தியாகராஜன் கேட்டுக்கொண்டார். அதே வேளையில், திருவள்ளுவரைப் போற்றுவதுடன் நிறுத்தி விடாமல், திருக்குறளின் செழுமையைப் போற்றுங்கள் என ஓம்ஸ் பா தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.
நாளை புதன் கிழமை காலை 9 மணிக்குக் கிள்ளானில் உள்ள ஜாலான் மேரு தமிழ்ப்பள்ளியிலும் காலை 11 மணிக்குக் காப்பாரில் உள்ள வலம்பொரோசா தமிழ்ப்பள்ளிலும் மேலும் இரு திருவள்ளுவர் உருவச் சிலைகள் திறப்பு விழா காணவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் தமிழ்த்திரு. ப.கு.சண்முகம் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



