GOPENG தமிழ்ப்பள்ளிக்கு 14.9 மில்லியன் நிதி! கல்வி அமைச்சு!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 29,

பேராக்கில் அமைந்துள்ள கோப்பேங் தமிழ்ப்பள்ளிக்குக் கல்வி அமைச்சின் மூலமாக 14.9 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார். கோப்பேங் தமிழ்ப்பள்ளியின் 80 ஆண்டு நிறைவு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த துணைக் கல்வி அமைச்சர் வழங்கப்பட்டிருக்கும் இந்த நிதி பள்ளியின் மேம்பாட்டுச் செலவுக்காகவும் 6 வகுப்பறைகளையும் அலுவலகங்களையும் ஆசிரியர் அறையுடன் அறிவியல் கூடம், கலந்துரையாடல் கூடம், சிற்றுண்டிச் சாலை ஆகியவற்றை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

பேராக் மாநில வீடமைப்பு மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் SANDRA NG, பேராக் மாநிலச் சுகாதார மனிதவள இந்தியர் நலப்பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் , புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், பேராக் மாநிலக் கல்வி இலாகாவின் இயக்குநர் ZULKAFLI MOKTHAR ஆகியோரும் கோப்பேங் தமிழ்ப்பள்ளியை நேரில் பார்வையிட்டனர்.

1946 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கோப்பேங் தமிழ்ப்பள்ளி தனியார் நிலத்திலிருந்து 1965 தற்போதைய கோப்பேங் ஜாலான் கம்பார் சாலைக்கு மாற்றப்பட்டது. தற்போது கோப்பேங் தமிழ்ப்பள்ளியில் 122 மாணவர்களும் 17 ஆசிரியர்களும் உள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *