Kinrara தமிழ்ப்பள்ளி இடிக்கப்படாது! அவதூறுகளை நிறுத்துங்கள்! – YB Prabakaran எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 10 Jul, 2024
Kinrara தோட்டத் தமிழ்ப்பள்ளியை அரசாங்கமும் தனியார் மேம்பாட்டு நிறுவனமும் இடிக்கவிருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என BATU நாடாளுமன்ற உறுப்பினர் Prabakaran இன்று நம்பிக்கை அளித்தார். பழமையானப் பள்ளிகளில் ஒன்றான Kinrara தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிக்கல்கள் என்ன என அறியாமல் வதந்திகளைப் பரப்பும் தரப்பினர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகுவதாகவும் அதுவே ஆர்ப்பாட்டத்திற்கும் வழிவகுப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக Kinrara தோட்டத் தமிழ்ப்பள்ளி
வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரியத் தலைவர் கோபி குருசாமி, பள்ளி பெற்றோர்
ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் உறுதியளித்தனர்.
Kinrara தோட்டத் தமிழ்ப்பள்ளியை வைத்து தேவையற்ற
பிரச்சனையை உருவாக்கும் தரப்பினர்களிடம் எந்தவோர் ஆதாரமும் இல்லை என BATU நாடாளுமன்ற உறுப்பினர் Prabakaran தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



