புத்தாக்கப் போட்டியில் கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 3 ஆசிரியர்களுக்கு விருது!
- THINAGAREN SANGGAREN
- 01 Aug, 2026
ஆகஸ்ட் 1,
ஆசிரியர்களுக்கிடையில் ஜொகூர் மாநில அளவில் நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களான திருமதி மோகனாம்பாள் ஜெயக்குமரன், திருமதி துளசி சித்திவிநாயகம், திருமதி சரண்யா இராமச்சந்திரமளி ஆகியோருக்குப் புத்தாக்க ஆசிரியர்கள் எனு விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். SIFIRINO எனும் விளையாட்டு வழி கணிதக் கற்றலுக்கான பலகை விளையாட்டினைச் சுயமாக உருவாக்கியதன் மூலம் இவர்களுக்கு ‘’2026-ஆம் ஆண்டிற்கான ஜொகூர் மாநிலப் புத்தாக்க ஆசிரியர்கள்” எனும் விருதை ஜொகூர் மாநிலக் கல்வி இலாகா வழங்கியுள்ளது. கணிதப் பாடத்தின் பெருக்கல் கணக்குகளை மாணவர்கள் இலகுவாக விளையாட்டின் மூலம் புரிந்துக் கொள்வதற்கு இந்த SIFIRINO விளையாட்டுப் பலகை உறுதுணையாக இருக்கும் என விருது பெற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளின் இடைவிடாத தொடர்
முயற்சியால் இந்த SIFIRINO
விளையாட்டுப் பலகையை உருவாக்கியிருப்பதாகவும் கடந்த 2025
ஆம் ஆண்டு கூலாய் மாவட்ட அளவில் நடைபெற்ற கற்றல் கற்பித்தலின் புத்தாக்கப் படைப்பு போட்டியில் முதல் நிலையிலும், 2025 ஆம் ஆண்டு ஜொகூர் மாநில
அளவில் முதலிடத்திலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான ஜொகூர் மாநில
அளவிலானச் சிறந்த புத்தாக்க ஆசிரியர்கள் விருது 2026 (Anugerah
Guru Inovatif Negeri Johor 2026) வழங்கப்பட்டுள்ளதாகக் கூலாய் ஆயில் பாம்
தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களான திருமதி துளசி சித்திவிநாயகம், திருமதி மோகனாம்பாள் ஜெயக்குமரன், திருமதி சரண்யா இராமச்சந்திரமளி ஆகியோர்
பெருமிதத்துடன் தெரிவித்தனர். ஆசிரியர்கள் புதுமையாகச் சிந்திக்கும்போது, மாணவர்களின் எதிர்காலமும் உயர்கிறது என்பதற்கான வலுவான சான்றாகும்.
இச்சாதனையைப் பெற்ற ஆசிரியர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பன்னீர்செல்வம் நடேசன், துணைத் தலைமையாசிரியர்கள் திரு. மே.கவியரசன், திரு. மு.ஆனந்தராஜா, திரு.கோ.ரமேஸ் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளனர். இவர்களின் பயணம், மேலும் பல ஆசிரியர்களுக்கு புதுமைகளை
உருவாக்கும் ஊக்கமாகவும், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும்
வழிகாட்டியாகவும் அமையும் என நம்பிக்கை கொள்கிறோம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



