நீலாய் தமிழ்ப்பள்ளிக்கு அந்தோணி லோக் வழங்கிய 10 SMARTBOARD!

top-news

நவம்பர் 1,

நீலாய் தமிழ்ப்பள்ளிக்குப் போக்குவரத்து அமைச்சர் ANTHONY LOKE RM 72,000 ரிங்கிட் மதிப்பிலான 10 ஸ்மார்ட்போர்ட்களை வழங்கியிருப்பதாக நெகிரி செம்பிலான் எதிர்கட்சித் தலைவரான ARUL KUMAR JAMBUNATHAN தெரிவித்தார்.

10 வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு இந்த 10 விவேகத் திறன்பலகைகளும் பயன்படும் வகையில் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

நீலாய் தமிழ்ப்பள்ளிக்கு நேரில் சென்று இந்த 10 ஸ்மார்ட்போர்ட்களையும் வழங்கும்படி அந்தோணி லோக் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப தாம் நேரில் வந்து வகுப்பறைகளைப் பார்வையிட்டதாகவும் அருள்குமார் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகள் நவீன வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த 10 விவேகத் திறன்பலகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி நிர்வாகம் முறையாகப் பராமரித்து மாணவர்களுக்குப் பயனளிக்க வேண்டும் என நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ARUL KUMAR JAMBUNATHAN கேட்டுக்கொண்டார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்