ஸ்கூடாயில் போட்டியிடும் டி.ஏ.பியின் இளம் பெண் கார்த்தியைனி!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 23,

நேற்று நடைபெற்ற ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு வேட்பாளர் அறிமுகத்தில் டி.ஏ.பியின் ஸ்கூடாய் தொகுதியில் வழக்கறிஞர் கார்த்தியைனி ஜெயபாலன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினராக இருந்த
MARINA IBRAHIM அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், ஸ்கூடாயில் யார் வேட்பாளர் என்கிற எதிர்பார்ப்பு வலுத்திருந்த நிலையில் ஸ்கூடாயில் பிறந்து வளர்ந்த வழக்கறிஞரான Kartiyaini Jeyapalan வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

ஸ்கூடாயில் பிறந்து வளர்ந்த கார்த்தியைனி
, மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். BUNTOMG சட்டமன்றத்தில் டி.ஏ.பியின் துளசி மனோகரனுக்கு ஆதரவாகக் கடந்த தேர்தலில் வாக்குகளைச் சேகரித்த கார்த்தியைனி, PERLING சட்டமன்ற அலுவலகத் தலைமை பொறுப்பாளராகவும், ஜொகூர் மாநில டி.ஏ.பியின் துணைச் செயலாளராகவும் ஜொகூர் மாநில டி.ஏ.பியின் மகளிர் பிரிவு உதவித் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.

கடந்த 2008 முதல் ஜொகூர் ஸ்கூடாயில் அதிக வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று வரும் டி.ஏ.பி
, எதிர்வரும் ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலிலும் டி.ஏ.பியின் Kartiyaini Jeyapalan வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *