106 நாட்களிலேயே முதலமைச்சர் பதவியைத் துறந்த இஸ்மாயில் லாசிம் – ராஜினாமாவுக்கான காரணம் குறித்து மௌனம்

top-news

கோலாலம்பூர், நவ 17: நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த டத்தோ இஸ்மாயில் லாசிம், தனது அரசியல் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.

தம்மிடம் விளக்கம் கேட்டு தொடர்புகொண்ட செய்தியாளர்களிடம், தற்போது செய்தியாளர் சந்திப்போ அல்லது அறிக்கையோ வெளியிடும் திட்டம் இல்லை என்றும், நிர்வாகம் தொடர்பான சில பணிகளைக் கவனிக்க கால அவகாசமும் தனிமையும் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்மாயில் லாசிம் தனது ராஜினாமா கடிதத்தை நெகிரி செம்பிலான் மாநில மன்னர் துவாங்கு முஹ்ரிஸிடம் சமர்ப்பித்துள்ளதாக பாரிசான் நேஷனல் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர் நேற்று உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற அவர், வெறும் 106 நாட்களிலேயே பதவி விலகியிருப்பது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்